Posts

Showing posts from September, 2024

திருச்செங்கோடு கட்டளை ஆதிசைவர்

 திருச்செங்கோட்டு குருத்துவமாக முதல் மண்டபக்கட்டளை அருணகிரி அய்யம்பாளையம் இமகமுடி சிற்றம்பல நாயனார் மடத்தார் என்ற கொங்க கிராமிய ஆதிசைவரில் பாரத்வாஜ கோத்திரத்தார் இருந்து வந்தனர். பின்னர் குலசேகர சோழன் (ராஜராஜன்), குலோத்துங்கன் ஆகியோர் சோழ தேசத்து அலகு ஆதிசைவரைத் திருச்செங்கோடு ஸ்தானிகத்திற்குக் குடியேற்றினான் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. இன்றும் இவ்விரு வகையினரே அர்ச்சகர்களாக உள்ளனர். ஆதிசைவர்கள் 55.  குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்   தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தரகண்டு   நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு   வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.           விளக்கவுரை -  குலசேகர சோழன் ,  குலோத்துங்க சோழன் ஆகிய   சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில் ,  அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக   நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும்     பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்கு...

1. குலசேகர பட்டர்

Image
திருச்செங்கோடு பட்டத்து குருக்கள் 1: குலசேகர பட்டர்  ஸ்ரீமது சுப்பிரமணிய பண்டிதர்   (கீழ்கண்ட கோத்திரத்தாரின் திருச்செங்கோடு கோயில் பட்டத்து குருக்கள் - குலகுருக்கள் வேறு) காணிகள் - கோத்திரங்கள்: 1 . மோரூர் - கண்ணன் கோத்திரம் 2 . மொடக்குறிச்சி - தூரன் கோத்திரம் 3 . கிழாம்பாடி - கண்ணன் 4 . குமாரமங்கலம் - தூரன், வில்லி, விழியன், பாண்டியன், ஈஞ்சன் ---------------------------------- திருச்செங்கோடு எட்டுக்கோத்திரத்தார் செப்பேடு உ ஸ்வஸ்திஸ்ரீமத் மகாமண்டலேசுவர அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் துலுக்கதள விபாடன் ஒட்டியதள விபாடன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் ராஜாதிராஜன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபரமேசுவரன் ராஜமனோகரன் போருக்கு வீமன் புயபலவீரன் சொல்லுக்கு அரிச்சந்திரன் உத்தம குணத்தான் ஒரு சொல்லுக்கு வாசகன் பத்திவரதன் பரசுராமனைப்போலவும் அஜபதி கஜபதி நவகோடி நாராயணன் கெசவேட்டை கண்டருளிய பூர்வ தெட்சிண பச்சிம உத்தர சப்த சமுத்திர தேசாதிபதியாகிய ஸ்ரீ விஜயமாநகரில் பிறதாபரான ராஜேந்திரசோழன் மனுநீதி கொண்ட சோழ...

2 குலோத்துங்க பட்டர் - எழுகரைச் செல்ல கோத்திரத்தார் கட்டளை

Image
திருச்செங்கோடு ஸ்ரீமது குலோத்துங்க வேதநாயக பண்டித குருசாமிகள் .   காணிகள் - கோத்திரங்கள் 1. இலுப்புலி - செல்லன் கோத்திரம் 2. கொன்னையார் - செல்லன் கோத்திரம் 3. கொக்களை - செல்லன் கோத்திரம் 4. பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம் 5. அனுமன்பள்ளி - செல்லன் கோத்திரம் 6. இடையார் - செல்லன் கோத்திரம் 7. எழுமாத்தூர் - செல்லன் கோத்திரம் ஆகியோரது திருச்செங்கோடு மடத்து குருக்கள். குலகுருக்கள் அல்ல. முகவரி: N. மகாதேவன் குருக்கள்,   குலோத்துங்க வேதநாயக பண்டிதகுருசாமிகள் திருமடம், 44/101, தெற்கு ரத வீதி , (ராமு சைக்கிள் ஸ்டாண்ட்), திருச்செங்கோடு - 637211 Mob: 94420 01431 Landline: 04288-254972

நாககிரி பண்டிதர்

 கட்டளைதாரர்கள்: 1. பனங்காடை கோத்திரத்தார் 2. மொளசி கன்ன கோத்தித்தார் 3.  ராசிபுரம் வெளிய கோத்திரம்- நாககிரி பண்டிதர் 4. மல்லசமுத்திரம் வெளிய கோத்திரம் 5. பணிமலைக்காவலர் கோயில் பூசாரிகளான சீர்காழி ஶ்ரீ கருணீகர்கள் உள்ளிட்டோர்

அர்த்தனாரி பண்டிதர் கஜான்சி

 கட்டளை: 1. ஏழூர் பண்ணை கோத்திரத்தார் 2. கலியாணி ஏழூர் பண்ணை கோத்திரத்ஙார் 3. தேவரடியார் மண்டபக்கட்டளை ஓதுவாருக்கு முன் தேவார நம்பி என்று தேவாரம் பாராயணம், பின்னர் கோயில் கஜான்சி (கஜானா)

சேனாபதி பண்டிதர்

எழுகரை நாட்டு நம்பி சதாசிவ பண்டிதர்