திருச்செங்கோடு கட்டளை ஆதிசைவர்

 திருச்செங்கோட்டு குருத்துவமாக முதல் மண்டபக்கட்டளை அருணகிரி அய்யம்பாளையம் இமகமுடி சிற்றம்பல நாயனார் மடத்தார் என்ற கொங்க கிராமிய ஆதிசைவரில் பாரத்வாஜ கோத்திரத்தார் இருந்து வந்தனர்.


பின்னர் குலசேகர சோழன் (ராஜராஜன்), குலோத்துங்கன் ஆகியோர் சோழ தேசத்து அலகு ஆதிசைவரைத் திருச்செங்கோடு ஸ்தானிகத்திற்குக் குடியேற்றினான் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. இன்றும் இவ்விரு வகையினரே அர்ச்சகர்களாக உள்ளனர்.



ஆதிசைவர்கள்
55. 


குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த் தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தரகண்டு நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.
         விளக்கவுரை - குலசேகர சோழன்குலோத்துங்க சோழன் ஆகிய சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில்அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும்  பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது  கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கோ ராஜகேசரி வர்மனான (முதல்) ராஜராஜ தேவர் என்பவன் தஞ்சாவூரை ராஜதானியாகக் கொண்டு மிகுந்த பராக்கிரமத்துடனும் நீதியுடனும் ஆட்சி புரிந்தான்பராதீனப் பட்டுக் கிடந்த சோழராச்சியத்தை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவனிவனே. கங்கபாடிநுளம்பபாடிவேங்கிநாடுகுடகுஈழம் முதலிய ராச்சியங்களை வென்றனன். மூவேந்தர் தமிழ்நாட்டுக்கும் அதிபன் என்பது தோன்ற மும்முடிச் சோழன் என்னும் பெயருண்டாயிற்று. ஆலயங்களிலெல்லாஞ் சிறந்ததாக இருத்தல் வேண்டுமென கருதிகண்டோர் அதிசயக்கத்தக்க
'
பிரஹதீசுரர்என்னும் ராஜ ராஜ ராஜேச்சுர ஆலயங் கட்டுவித்தான். இவன் சைவ சமயத்தி லீடுபட்டவனாயினும் பௌத்த விஹாரங்களுக்கும்ஜைனப் பள்ளிகளுக்கும் விஷ்ணுக்ரஹங்களுக்கும் பல தருமங்கள் செய்திருக்கிறான் தன் நாட்டிலுள்ள ஆலயங்களிலெல்லாம் ஆகமோக்தமாக பூஜை முதலியன  நடக்குமாறு வடநாட்டிலிருந்து பல பிராமணர்களை வரவழைத்துக் குடியேற்றினான். கல்விமான்களிடத்திற் பற்றுடையவன். இவன் காலத்திற்றான்  நம்பியாண்டார் நம்பிகளும் கண்டராதித்த தேவர் முதலிய திருவிசைப்பா வுடையாரும் பிறருமிருந்தார்கள். திருமறை கண்ட சோழனுமிவனே. கி.பி. 985 முதல் 1012 வரை ஆட்சி புரிந்தானென்று சாசன பரிசோதகர்கள்  தீர்மானிக்கிறார்கள். கொங்கு இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த தென்பதை இவன் ராச்சியவருஷம் வாழவந்தி நாட்டைச் சேர்ந்ததூசியூரில் ஒரு மழவராயனால் திருக்கற்றளியுடைய பரமேசுரர் கோவிலுக்கு ஏற்படுத்திய வரிஈழத்துப் போரில் மாண்ட தன் தந்தையின் தாகசிரம பரிகாரத்துக்காக வெட்டிய கிணறு முதலியவற்றை குறிக்குஞ்சாசனங்களாலும் ஒற்றியூரன் பிரதி கண்டவன்மன் அமன்குடி அல்லது கணபதி நல்லூரில் கொடுத்த நிலம்குளத்தின் சாசனங்களாலும் (S.S.I. VOI. III) நன்கு காணலாம். அந்நாளில் தான்கொங்கு நாட்டிற் பாடல்பெற்ற தலங்களில் ஆகமோக்தமாகப் பூஜை முதலியன நடைபெறும் பொருட்டுத் தன்னாட்டிற்றேர்ந்த பிராமண பண்டிதர்களை அழைத்து வைத்து அவர்களுக்கு  வேண்டிய காணி பூமியும் கௌரவங்களும் கொடுத்தனன். இந்த ராஜராஜ தேவர் தன்னாட்டிருந்து அழைத்துக் குடியேற்றியவருக்குத் தன் பெயரான  "குலசேகரப் பட்டன்" எனப் பெயர் கொடுத்தனன். இந்த ராஜ ராஜ தேவர்க்குக் குலசேகரன் என்னும் பெயர் உண்டு என்பதைத் திருமுறை கண்ட புராணம்.
                         (மேற்)
உலகுபுகழ் தருசைய மீது தோன்றி யோவாது வருபொன்னி
                          
சூழ்சோணாட்டிற் றிலகமென விளங்குமணி மாடவரூர்த் தியாகேசர் பதம்
                          
பணிந்து செங்கோலோச்சி யலகில்புகழ் பெறுராச ராசமன்ன னபயகுலசேகரன்பா
                           
லெய்து மன்ப ரிலகுமொரு மூவரருள் பதிகமொன்றொன் றேயினிதி னுரை
                            
செய்ய வன்பாற் கேட்டு
        
    "கொங்கு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத் தோனருள் செய்த கொள்கை யெல்லாமண்டுபெருங் காதலினாற் சொல்லி" என்பனவற்றால் விளங்குகிறது. இதன்பின்,

     கோவிராஜகேசரி பன்மரான திரிபுவன சக்கிரவர்த்திகள் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் என்பவன் மிகுந்த பராக்கிரம முடையவனாக ஆட்சிக்கு வந்தனன். இவன் காலத்து வடக்கே கங்கை – தெற்கே ஈழம் - மேற்கே சமுத்திரம் - கிழக்கே கடாரம் (பர்மா) வரையிலும் செங்கோல் செலுத்தி வந்தான். சுங்கங்களைத் தவிர்த்தான். நில அளவு செய்து ஆறிலொரு கடமை ஏற்படுத்தினான். ஏரிகால்வாய் வெட்டினான். காடுகளை வெட்டிப் பட்டணமாக்கினான். பல சிவாலயம் விஷ்ணு வாலயங்கள் கட்டுவித்தான். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான்.

இவன் மிகுந்த கல்வி மானாக இருந்ததன்றிக் கற்றோர்க்கு உதாரன். இவன் காலத்தில்தான் சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். விசிஷ்டாத்வைத மதஸ்தாபக ரான ஸ்ரீராமாநு ஜாசாரியரிருந்தார். இவ்வரசனால் தனக்குத் தீங்கு நேருமென நினைந்து தான் போஜள ராஜ்ஜியத்ற்கு போய் ஒளித்திருக்க நேர்ந்தது. இக்குலோத்துங்கன் சுத்த சைவனாயினும் வைஷ்ணவஜைனபௌத்தக் கோவில்கள் தோறும் இவன் சாசனங்களைக் காணலாம். கி.பி. 1070 முதல் 1118 - வரை ஆட்சி புரிந்திருக்கிறான் என்பர்.

சென்னியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமா னனபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதியைந்தி னொன்றாய் விளங்குத் தகைத்தவ்வூர்

                                         (
பெரியபுராணம்)
     
இந்தக் குலோத்துங்க சோழவேந்தன் திருச்செங்கோட்டிற்  பூசித்துள்ள ஆலம்பாயன கோத்திரத்தானான குலசேகர பட்டனுக்குச் சகாயமாகப் (பெண் கொள்ளல் கொடுத்தலுக்குக்) காசிப கோத்திரத்து விற்பன்னரான ஒரு சிவாசாரியருக்குக் "குலோத்துங்க பட்டன்" எனத் தன்பெயரும் பிற ஆதிக்கமுந் தந்து வாழ்ந்திருக்கச் செய்தனன்.

காரணிக மான வளவன்கலி யுகாதியிற் கட்செவி
                            
மலைப்பரமனைக்
 
கந்தனை வணங்கிமக பூசையுண்டாக்கினன் கைலாச
                               
நாதசிவனைத் தாரணி புகழ்ந்திடத் தாபித்தனன் பெரிய தண்கூப
                               
மதுகண்டனன் சைவ மறையோர்பூச னைக்கினியராகவே தனதுமண்
                                
டலமேவியே சீரணி சீகாழியா லம்பாயர் காசிபர் திறத்தொடர்ச்சனை
                                   
செய்யவே
     
திறமுற வமைத்தனன் மநுநீதி முறைகண்ட செம்பியன்
                               
பெற்றபெருமை
(திருச்செங் கோட்டுத் திருப்பணி மாலை)

     இதனால் நன்கு விளங்கும். இது போலவே கொங்கு மண்டலத்துள்ள மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்களாயும்நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள் பாடல் பெற்ற தலங்கள்மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும் ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்

Comments